Recent Articles

Monday, 8 May 2017

மஹாபாரத மேற்கோள்கள்

21.அன்பு 



அன்பெனும் ஆழ்கடலில் ஆழ்ந்த 
அனந்தசயனத்தில் மற்றவரை ஆழ்த்தினால் ..
பூலோகமெங்கும் புன்னகை எனும் பூ என்றென்றும் பூத்துகக்குலுங்கும்..!


22.தன்னிலை 


 எவர்  என்ன கூறினாலும் சரி..
எந்நிலை வந்தாலும் 
தன்னிலை மாறாதிருப்பாயின் 
அதுவே உயர்நிலையை அடையும் 
மார்க்கமாகும்..!


23.மதி  



நடப்பவை அனைத்தும் விதியின் 
விளையாட்டு என ஒருபோதும் தொவண்டுவிடாதீர் 
விதியையும் வீழ்த்தும் வல்லமை 
மதிக்கு உண்டு..!


24.நண்பன் 


அனைவருக்கும் கர்ணனோ கண்ணனோ 
நண்பனாக தேவைப்படுகிறான்.
ஆனால்  
கர்ணனை போன்றோ கண்ணனை போன்றோ 
இருக்க நினைப்பதில்லை..!


25.வெற்றி 



உங்களை நிராகரித்த அதே 
இடத்தில் ...
நிறக்கக்கவே முடியாத சக்தியாக வந்து நிற்பதுதான்
 உங்கள் வெற்றி....!

Saturday, 6 May 2017

மஹாபாரத மேற்கோள்கள்

16.அலட்சியம் 



எது ஏது  என்று எவருக்கு  தெரியுமோ 
என 
அல்டட்ச்சியமாக இருந்து விடாதீர்  
அதே அலட்சியம் நாளை அவசியமாகும் ..!

17.பார்வை 


எது தர்மம் ...
எது அதர்மம் என்பது 
நாம் அதை  எவ்வாறு பார்க்கிறோம் 
என்பதை பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது ..!

18.சதி / விதி 


விதியில் சதி இருந்தால் 
அதை மதியால் வெல்லலாம்..
ஆனால்  
அந்த சதி தான் விதி என்றால் 
அதிலிருந்து உன்னை காப்பாற்ற 
எப்போதும் 
உன்னுடன் நான் இருக்கிறேன் ..!
#கிருஷ்ணன் 

19.வெற்றி 

சூழ்ச்சிகளால் அடையும் வெற்றி நிலையானதல்ல ...
சூட்சமத்தால் அடையும் வெற்றியே நிலையானது ..!

20.இகழ்வோர் 

இகழ்வோரை ஒருபோதும் சபிக்காதிர்கள்..,
ஏன்னெனில் 
நம் முன்னேற்றத்திற்கு வழிவித்திடுவதே 
அவர்கள் தான் ...! 

மஹாபாரத மேற்கோள்கள்

 11.இன்பம் 


இன்னல்கள் இல்லாமல்
இன்பம் கிட்டதென்பது
இவ்வுலக நியதியில் ..,
இன்றியமையா ஒன்றாகும்..!

12.வழிகாட்டுதல்

 

வாழ்வில் மற்றவருக்கு வழிகாட்டுவது 
எளிதாக தோன்றும் ...
ஆனால் 
அவ்வழியே அவர்களை வழிநடத்துவது 
என்பது 
அவ்வளவு எளிதல்ல ...!


13.சதி 


எந்த ஒரு 
சதியையும்  எளிதில் வெல்லலாம் ...
சலனமும் ,சஞ்சலமும் இல்லாத நதியை போல 
நம் மனது இருக்குமாயின் ..!

14.இலக்கு 

அவமானத்தை அனுபவமாக்கிக் கொள்... 
தன்மானத்தை தகுதியாக்கிக் கொள்...
இதுவே இலக்கினை காட்டும் விளக்காகும் ..!

15.நாம்



வாழ்வில் நாம் எப்போதும் 
நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று 
எந்த நிலையிலும் 
நாம்  நாமாக இருக்க வேண்டும் என்பதே ..!

Thursday, 4 May 2017

மஹாபாரத மேற்கோள்கள்

 GODS PICTURE & QUOTES

மஹாபாரத  மேற்கோள்கள்

1.கீதாசாரம்  


#கிருஷ்னன் 




2.அன்பு 
குற்றம் சொல்ல ஆயிரம் கரணங்கள் இருக்கலாம்...!
ஆனால் ..,
மன்னிக்கவும்...  மறக்கவும் ....
ஒரே காரணம் தான் ....
அன்பு ....!
அன்பு  மட்டும் தான் ...!


3.முன்னேற்றம் 
எந்த போராட்டமும் இல்லை என்றால் ,
எந்த முன்னேற்றமும் இல்லை .

4.வார்த்தை 
நாம் பேசும் வார்த்தைகளில்
 கவனமாக இருந்தாலே போதும் இன்னல்கள் நேராது.


5.பாடம் 
நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும்
நமக்கு எதாவது ஒரு பாடத்தை கற்று தருகிறது.

6.தவறு 
உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில்
அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே...

7.மாற்றம் 
மாற்றம் வேண்டும் எனில் முதலில்
நாம் மாற வேண்டும் .

8.வாழ்வு 
எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்,
எப்படித்தான் வள்ர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள் .

9. சிறப்பு 
தானமாக இருந்தாலும் சரி ,
அன்பாக இருந்தாலும் சரி ,
நம் மனதின் ஆழத்திலிருந்து
முழுமையாக கொடுக்காதவரை
அதன் சிறப்பு தெரிவதில்லை.

 10.வாழ்க்கை 
வாழ்க்கை என்பது சூரியன் அல்ல ,
என்றும் முழுமையாக பிரகாசிக்க ..
அது நிலவை போன்றது அதில் வளர்பிறை ,
தேய்பிறை என அனைத்தும் இருக்கும் .
ஒரு நாள் மறைந்தும் போகும் ..!