Saturday, 6 May 2017

மஹாபாரத மேற்கோள்கள்

 11.இன்பம் 


இன்னல்கள் இல்லாமல்
இன்பம் கிட்டதென்பது
இவ்வுலக நியதியில் ..,
இன்றியமையா ஒன்றாகும்..!

12.வழிகாட்டுதல்

 

வாழ்வில் மற்றவருக்கு வழிகாட்டுவது 
எளிதாக தோன்றும் ...
ஆனால் 
அவ்வழியே அவர்களை வழிநடத்துவது 
என்பது 
அவ்வளவு எளிதல்ல ...!


13.சதி 


எந்த ஒரு 
சதியையும்  எளிதில் வெல்லலாம் ...
சலனமும் ,சஞ்சலமும் இல்லாத நதியை போல 
நம் மனது இருக்குமாயின் ..!

14.இலக்கு 

அவமானத்தை அனுபவமாக்கிக் கொள்... 
தன்மானத்தை தகுதியாக்கிக் கொள்...
இதுவே இலக்கினை காட்டும் விளக்காகும் ..!

15.நாம்



வாழ்வில் நாம் எப்போதும் 
நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று 
எந்த நிலையிலும் 
நாம்  நாமாக இருக்க வேண்டும் என்பதே ..!

0 comments:

Post a Comment