Monday, 8 May 2017

மஹாபாரத மேற்கோள்கள்

21.அன்பு 



அன்பெனும் ஆழ்கடலில் ஆழ்ந்த 
அனந்தசயனத்தில் மற்றவரை ஆழ்த்தினால் ..
பூலோகமெங்கும் புன்னகை எனும் பூ என்றென்றும் பூத்துகக்குலுங்கும்..!


22.தன்னிலை 


 எவர்  என்ன கூறினாலும் சரி..
எந்நிலை வந்தாலும் 
தன்னிலை மாறாதிருப்பாயின் 
அதுவே உயர்நிலையை அடையும் 
மார்க்கமாகும்..!


23.மதி  



நடப்பவை அனைத்தும் விதியின் 
விளையாட்டு என ஒருபோதும் தொவண்டுவிடாதீர் 
விதியையும் வீழ்த்தும் வல்லமை 
மதிக்கு உண்டு..!


24.நண்பன் 


அனைவருக்கும் கர்ணனோ கண்ணனோ 
நண்பனாக தேவைப்படுகிறான்.
ஆனால்  
கர்ணனை போன்றோ கண்ணனை போன்றோ 
இருக்க நினைப்பதில்லை..!


25.வெற்றி 



உங்களை நிராகரித்த அதே 
இடத்தில் ...
நிறக்கக்கவே முடியாத சக்தியாக வந்து நிற்பதுதான்
 உங்கள் வெற்றி....!

0 comments:

Post a Comment